Home One Line P2 உலக வணிக அமைப்பு இயக்குனர் பதவிக்காலம் முடிவடைவதற்குள் பதவி விலகுகிறார்

உலக வணிக அமைப்பு இயக்குனர் பதவிக்காலம் முடிவடைவதற்குள் பதவி விலகுகிறார்

721
0
SHARE
Ad

ஜெனீவா: உலக வணிக அமைப்பு இயக்குநர், பதவிக் காலம் முடிவடைவதற்குள் அப்பதவியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி விலகுவதாக அறிவித்தார்.

இது குறித்து குடும்பத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் தனிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ரோபர்டோ அசெவெடோ தெரிவித்தார்.

அவர் 2013 முதல் உலக வணிக நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

அசெவெடோவின் இந்த பதவி விலகல் உலகப் பொருளாதாரம் ஒரு கடினமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் வந்துள்ளது.

உலகளாவிய பொருளாதாரத்தை பாதித்துள்ள கொரொனா தொற்றுநோய் மற்றும் அனைத்துலக வணிகம் நெருக்கடி போன்றவை தற்போது அதிகமாக உலக நாடுகளைப் பாதித்துள்ளது.

பிரெக்சிட் காரணமாக அரசியல் அழுத்தங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வணிக யுத்தம் ஆகியவற்றால் உலகளாவிய வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.