Home One Line P2 வைகறை ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “அமுதே தமிழே” – புதிய காணொளிப் பாடல் வெளியீடு

வைகறை ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “அமுதே தமிழே” – புதிய காணொளிப் பாடல் வெளியீடு

1261
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வைகறை ஸ்டூடியோஸ் தயாரிப்பில் யூடியூப் தளத்தில் “அமுதே தமிழே” என்னும் புதிய காணொளிப் பாடல் கடந்த சனிக்கிழமை மே 23-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

முனைவர் முரசு நெடுமாறனின் அழகு தமிழில் உருவாகியுள்ள பாடல் வரிகள் தமிழின் சிறப்புகளை விளக்கும் விதத்தில் கவிநயத்துடன் அழகாக அமைந்துள்ளது. பாடலும் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

வாரம் ஒரு பாடலென வாரம்தோறும் காணொளி பாடல்களை வெளியிடும்
‘இசை முரசு’ இளவரசு நெடுமாறன் அமுதே தமிழே பாடலுக்கு சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கர்நாடக இசைப் பாடல் வடிவில் திரையிசைப் பாணியில் மிகச் செறிவாக பாடலுக்கு இசையைத் தந்துள்ளார்.

அறிமுகப் பாடகி தாரிணி லவிந்திரன் தன் முதல் படைப்பான இந்தப் பாடலை தனது இனிமையான குரலில் பாடி நம்மை லயிக்க வைத்திருக்கிறார். மலேசியத் தமிழிசைத் துறைக்கு இவரின் வருகை இன்னும் இதுபோன்ற நல்ல பல பாடல்களின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என நம்பலாம். இசை ஆசிரியர் பவானி பாலச்சந்தரிடம் இசைப் பயிற்சி மேற்கொண்டு வரும் தாரணி பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.

கோவர்தினி ஜெகதீசன், இந்த அழகான தமிழ் பாடலுக்கு பரதநாட்டிய நடனத்தை வழங்கியுள்ளார். தன் அபிநய அசைவுகளை திறன்பட வழங்கியுள்ளார்.

காணொளிக் காட்சிகள் அருமையாக ஒளிப்பதிவு செய்யப்படுள்ளன.

மொத்தத்தில் ஒரு சிறப்பான தமிழ் இசைக் காணொளியை குழுவினர் தந்திருக்கின்றனர்.

“அமுதே தமிழே” பாடலைக் கீழ்க்காணும் யூடியூப் தள இணைப்பில் காணலாம் :