Home One Line P1 ஈப்போவில் 33 பேர் மதுபான விடுதிகளில் கைது

ஈப்போவில் 33 பேர் மதுபான விடுதிகளில் கைது

564
0
SHARE
Ad

ஈப்போ: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக முப்பத்து மூன்று பேர் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.

முதல் நடவடிக்கையில், ஈப்போ கார்டனில் உள்ள கேனிங் எஸ்டேட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தி, செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் நான்கு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மதுபான விடுதி மேற்பார்வையாளர் மற்றும் 29 முதல் 44 வயதுக்குட்பட்ட மூன்று வாடிக்கையாளர்கள் அடங்குவதாக ஈப்போ காவல் துறை உதவி ஆணையர் அஸ்மாடி அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“மேற்பார்வையாளர் கதவைத் திறந்தார், நாங்கள் காவல் துறையினராக அடையாளம் காட்டிக் கொண்டோம்.

“வளாகத்திற்குள் நுழைந்த பிறகு, நாங்கள் மூன்று பேரைக் கண்டோம். அங்கே மது அருந்திக் கொண்டிருப்பதைத் தவிர வேறு நியாயமான விளக்கங்களை அவர்களால் வழங்க முடியவில்லை. காவல் துறையினர் பல உரிம ஆவணங்களை வளாகத்திலிருந்து பறிமுதல் செய்தனர். ” என்று அவர் கூறினார்.

நேற்று அதிகாலை 12.25 மணியளவில் நடந்த இரண்டாவது நடவடிக்கையில், ஜாலான் லாவ் ஏக் சிங்கில் உள்ள ஒரு மதுபான விடுதியில் 29 பேர் கைது செய்யப்பட்டதாக அஸ்மாடி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் மதுபான விடுதி உரிமையாளர் மற்றும் 28 வாடிக்கையாளர்கள் என்று அவர் கூறினார்.

“நாங்கள் வளாகத்திற்கு வந்தபோது, ​​கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். நாங்கள் பல முறை கதவைத் தட்டினோம்.

“எங்களை அடையாளம் காட்டிக் கொண்ட பிறகு, நாங்கள் உள்ளே சென்று வாடிக்கையாளர்களைக் கண்டோம். அதில் மூன்று பெண்கள்.” என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் மதுபான விடுதிகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் எந்தவொரு கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன என்று தெரியாது எனவும் கூறியதாக அஸ்மாடி கூறினார்.

“தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு 2020- இன் விதி 15- இன் கீழ் விசாரணைகளை எளிதாக்க அனைத்து 33 பேரும் தடுத்து வைக்கப்படுவார்கள். மேலும், தொற்று நோய் பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலுக்காக தண்டனைச் சட்டம் பிரிவு 269 கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். ” என்று அவர் கூறினார்.