Home One Line P2 முதன் முறையாக இணையம் வழி ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஆஸ்ட்ரோ

முதன் முறையாக இணையம் வழி ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஆஸ்ட்ரோ

949
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோவில் தமிழ் அலைவரிசைகளில் ஒளியேறும் சிறப்பு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், ஆஸ்ட்ரோவின் புதிய அலைவரிசைகளின் தொடக்கங்கள் எல்லாம் இதுவரையில் வழக்கமாக நேர்முக ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமாகவே அறிவிக்கப்பட்டு வந்தன.

சில சமயங்களில் பத்திரிகை அறிக்கைகள் மூலம் ஆஸ்ட்ரோவே தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும்.

நேற்று வியாழக்கிழமை (மே28) முதன் முறையாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கென ஆஸ்ட்ரோ இணையம் வழியான சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.

#TamilSchoolmychoice

செல்லியல் உள்ளிட்ட பல ஊடகங்கள் இந்த இணையம் வழி சந்திப்பில் கலந்து கொண்டன.

எதிர்வரும் ஜூன் 1 முதல் மூன்று புதிய துல்லிய ஒளிபரப்பு (எச்.டி) அலைவரிசைகள் தொடங்கப்படுவதை அறிவிப்பதற்காக இந்த இணையம் வழியான ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. புதிய துல்லிய ஒளிபரப்பு அலைவரிசைகள் தொடர்பான தகவல்களும் இந்த சந்திப்பின்போது வழங்கப்பட்டன.

இந்த இணைய சந்திப்பில் ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளுக்கான பிரிவின் உதவித் தலைவர் மார்க் லூர்ட்ஸ் உள்ளிட்ட மற்ற அதிகாரிகளோடு, உள்நாட்டுக் கலைஞர்கள் சிலரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை வழங்கினர்.

தமிழ் நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

அடுத்து : ஆஸ்ட்ரோ : ஜூன் 1 முதல் 3 புதிய எச்.டி. தமிழ் அலைவரிசைகள்