சில சமயங்களில் பத்திரிகை அறிக்கைகள் மூலம் ஆஸ்ட்ரோவே தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும்.
நேற்று வியாழக்கிழமை (மே28) முதன் முறையாக தமிழ் ஊடகவியலாளர்களுக்கென ஆஸ்ட்ரோ இணையம் வழியான சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.
செல்லியல் உள்ளிட்ட பல ஊடகங்கள் இந்த இணையம் வழி சந்திப்பில் கலந்து கொண்டன.
இந்த இணைய சந்திப்பில் ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளுக்கான பிரிவின் உதவித் தலைவர் மார்க் லூர்ட்ஸ் உள்ளிட்ட மற்ற அதிகாரிகளோடு, உள்நாட்டுக் கலைஞர்கள் சிலரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை வழங்கினர்.
தமிழ் நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு தனது கருத்துகளைத் தெரிவித்தார்.