Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ஜூன் 1 முதல் 3 புதிய எச்.டி. தமிழ் அலைவரிசைகள் அறிமுகம்

ஆஸ்ட்ரோ : ஜூன் 1 முதல் 3 புதிய எச்.டி. தமிழ் அலைவரிசைகள் அறிமுகம்

1370
0
SHARE
Ad

கோலாலம்பூர் – Zee தமிழ் எச்டி (அலைவரிசை 235), ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) மற்றும் புதிய, பாப்-ஆப் (pop-up) அலைவரிசை ரஜினி70 எச்டி (அலைவரிசை 100) ஆகிய அலைவரிசைகளின் அறிமுகத்துடன் 1 ஜூன் 2020 முதல் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ கோ மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அதிக தமிழ் எச்டி உள்ளடக்கங்களைக் கண்டு மகிழலாம். இம்மூன்று அலைவரிசைகள் அறிமுகத்துடன், தற்பொழுது ஆஸ்ட்ரோவில் மொத்தம் 9 இந்திய எச்டி அலைவரிசைகள் உள்ளன.

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வணிகத் துணைத் தலைவர் மார்க் லூர்தஸ் (படம்) கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான, சிறந்த உயர்தர பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவதால், ஜூன் 1 முதல் அதிக எச்டி உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) ஆஸ்ட்ரோ மற்றும் NJOI வாடிக்கையாளர்களுக்கு புதிய தொடர்களான ‘தமிழ் லட்சுமி’ மற்றும்  ‘நலம் அறிய ஆவல்’ உடன் சேர்த்து உள்ளூர் தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சித் திரைப்படங்கள் (டெலிமூவி), குறும்படங்கள் மற்றும் உள்ளூர் மலையாளம் மற்றும் தெலுங்கு நாடகங்களுடன் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்கும்” என்றார்.

புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள், இவ்வருடம் அவரது 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதனைக் கொண்டாடும் வகையில் அவர் நடித்த முதல் படமான அபூர்வ ராகங்கல் தொடங்கி இவ்வாண்டு திரைக்கு வந்து சில மாதங்களேயான தர்பார் வரை எழுபது திரைப்படங்களை பாப்-ஆப் (pop-up) அலைவரிசையான ரஜினி70 எச்டி-இல் (அலைவரிசை  100) 1 முதல் 30 ஜூன் வரைக் கண்டு ரசிக்கலாம்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் மிகவும் பிரபலமான அலைவரிசைகளில் ஒன்றான Zee தமிழ் எச்டி (அலைவரிசை 235) சக்ரவர்த்தி தொகுப்பில் (பேக்) இடம் பெறுகிறது.”

Zee Network APAC-இன் நிர்வாகத் துணைத் தலைவர் திரிப்தா சிங் கூறுகையில், “மலேசியாவிற்கு மீண்டும் வருகை புரிவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், மலேசியாவின் முன்னணி உள்ளடக்க வழங்குநரான ஆஸ்ட்ரோவில் எங்கள் முன்னணி தமிழ் அலைவரிசையான Zee தமிழை அறிமுகப்படுத்துவது இன்னும் சிறந்தது. சிறந்த தமிழ் பொழுதுபோக்குகளை உள்ளூரில் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”

சக்ரவர்த்தி தொகுப்பு வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய் எச்டி (அலைவரிசை 232) மற்றும் கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 233) ஆகியவற்றுடன் கூடுதலாக Zee தமிழ் எச்டி (அலைவரிசை 235) இணைவதன் வழி அதிக எச்டி உள்ளடக்கங்களைக் கண்டு மகிழலாம். முதல்தர (பிரீமியம்) நிகழ்ச்சிகளான “ச ரி க ம பா”; சேம்ப்ஸ் சீசன் 2  மற்றும் காமெடி கேங்ஸ்டர்ஸ்; எழுச்சியூட்டும் பேச்சு நிகழ்ச்சியான, “தமிழா தமிழா”; பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சமையல் நிகழ்ச்சியான, அஞ்சறை பெட்டி; அற்புதமான விளையாட்டு நிகழ்ச்சிகளான ஜீன்ஸ் சீசன் 9 மற்றும் சூப்பர் மாம் சீசன் 2; மற்றும் சிறப்பு விளைவுகள் நிறைந்த காவியங்கள் மற்றும் நாடகங்களான, ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம், இரட்டை ரோஜா  மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட பலதரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை Zee தமிழ் எச்டி (அலைவரிசை 235) வழங்குகிறது.

சக்ரவர்த்தி தொகுப்பை அண்மையில் எச்டிக்கு மேம்படுத்தியதனால், எஸ்டி எனப்படும் சாதாரண தர அலைவரிசைகளான ராஜ் டிவி, ஜெயா டிவி மற்றும் கலைஞர் டிவி ஆகியவை இனி இந்தத் தொகுப்பில் கிடைக்கப் பெறாது.

இந்த எச்டி அலைவரிசைகள் மற்றும் பலவற்றை எச்டி பெட்டியுடன் கண்டு மகிழவும். உங்கள் எச்டி அல்லாத பெட்டியை அலைவரிசை 200 அல்லது 03-9543 3838 வழியாக கூடுதல் கட்டணம் அல்லது ஒப்பந்தம் இன்றி மேம்படுத்தலாம்.

மேல் விவரங்களுக்கு, www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்