Home One Line P1 பேராக்: கொவிட்19 இருப்பதாகக் சந்தேகிக்கப்படும் ரோஹிங்கியா அகதி தப்பி ஓட்டம்

பேராக்: கொவிட்19 இருப்பதாகக் சந்தேகிக்கப்படும் ரோஹிங்கியா அகதி தப்பி ஓட்டம்

427
0
SHARE
Ad

ஈப்போ: கொவிட்19 இருப்பதாக சந்தேகிக்கப்படும் ரோஹிங்கியா அகதி ஒருவர் இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பேராக் காவல் துறை துணைத் அனுவார் ஒத்மான் கூறுகையில், ரோஹிம் முகமட் சோகாரியா, 27, ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலை 11 மணியளவில் சுகாதார அமைச்சக பயிற்சி நிறுவனத்தில் தனது அறையில் இருந்து காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“சுகாதாரப் பணியாளர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது சோதனைகளை நடத்தவிருந்தனர். அவர் தனது அறையில் காணப்படவில்லை.

#TamilSchoolmychoice

“அவர்கள் தேடினார்கள், ஆனால் அவரை வளாகத்திற்குள் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

“அந்நபரைத் தேடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

ரோஹிம் சுமார் 65 கிலோ எடையுள்ளவர், 165 செ.மீ முதல் 168 செ.மீ வரை உயரம் கொண்டவர், குறுகிய கருப்பு முடி கொண்டவர் என்று அனுவார் கூறினார்.

“அவர் கடைசியாக நீல நிற மருத்துவமனை உடையை அணிந்திருந்தார்.” என்று அவர் கூறினார்.

“இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269 மற்றும் தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் விதிமுறைகளின் பிரிவு 22 (பி) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது. ” என்று அவர் தெரிவித்தார்.