Home One Line P2 இந்தியாவில் அடுத்த ஓராண்டுக்கு புதிய அரசாங்கத் திட்டங்கள் அறிமுகம் இல்லை

இந்தியாவில் அடுத்த ஓராண்டுக்கு புதிய அரசாங்கத் திட்டங்கள் அறிமுகம் இல்லை

584
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஓராண்டுக்கு எவ்விதப் புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்த கோரிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.

“கொவிட்19 தொற்றால் அரசிடம் இருக்கும் பொது நிதியைப் பயன்படுத்துவதில் மாற்றங்கள் செய்வது கட்டாயமாகியுள்ளது. நிலைமைக்கு ஏற்றாற்போல நிதிப் பங்கீடுகளில் மாற்றம் செய்யப்படும்.” என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், மத்திய வரவு செலவு திட்டம் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் வரும் மார்ச் 31- ஆம் தேதி வரை தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக அது கூறியுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள நிலையில் இந்த புதிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில், கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226,770- ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,851 பேர் இத்தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 273 பேர் உயிரிழந்துள்ளனர்.