Home One Line P1 பிகேஆர் அலுவலகத்தில், துன் மகாதீர், வாரிசான் மற்றும் பிற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

பிகேஆர் அலுவலகத்தில், துன் மகாதீர், வாரிசான் மற்றும் பிற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

783
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நீண்ட நாட்களுக்குப் பிறகு துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் வாரிசான் கட்சித் தலைவர் ஷாபி அப்துல்லா ஆகியோர், பிகேஆர் தலைமையகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

தற்போது அங்கு டாக்டர் மகாதீர் முகமட், வாரிசான் கட்சி மற்றும் நம்பிக்கை கூட்டணி முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு கூட்டம் நடந்து கொண்டிருப்பதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.

துன் டாக்டர் மகாதீருடன் இணைந்து செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகள் இணைந்து புதியதொரு அரசாங்கத்தை உருவாக்க திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து பல நாட்களாக பேசப்பட்டு வந்தாலும், இதற்கான ஒரு தீர்வு இன்னமும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. நம்பிக்கைக் கூட்டணி மேலும் வலுப்பெறச் செய்ய துன் டாக்டர் மகாதீர் முகமட், பிகேஆர் கட்சித்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இணைந்து கூடியவிரைவில் ஒரு முடிவுக்கு வர வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

இருவரும் தங்களின் கடந்தகால அரசியல் வேறுபாடுகளை கலைந்து புதியதொரு பாதையில் செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும், இல்லையெனில் நம்பிக்கைக் கூட்டணி எதிர்க்கட்சியாகவே நிலைத்து நிற்கும் சூழல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

22 மாதக் கால ஆட்சியில் இருந்த நம்பிக்கைக் கூட்டணி தலைமைத்துவம், டாக்டர் மகாதீர் முகமட் முடிவினால் மூழ்கடிக்கப்பட்டது என்று பரவலான கருத்துக்கள் உள்ளன. தெளிவான பதிலும், தெளிவான முடிவும் இல்லாததால், இந்த கூட்டணி இறுதியில் இரண்டு வருடங்கள் கூட எட்டாத நிலையில் வீழ்ச்சி அடைந்தது.

மேலும் இம்மாதிரியான சூழல் ஏற்படாமல் இருப்பதற்கு டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அன்வார் இப்ராகிம் இருவரும் இணைந்து ஒரு முடிவுக்கு வருவது நம்பிக்கைக் கூட்டணியின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என்று நம்பப்படுகிறது.