Home One Line P1 ஜூன் 10 முதல் பினாங்கு மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும்

ஜூன் 10 முதல் பினாங்கு மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தும்

483
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு நாளை முதல் மீட்டிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆனையை அமல்படுத்தும் என்று பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ தெரிவித்தார்.

முன்னதாக, பினாங்கு மாநிலம், மத்திய அரசின் பரிந்துரைக்கு ஏற்ப ஜூன் 10-ஆம் தேதி மீட்சிக்கான கட்டுப்பாட்டை அனுசரிக்காது என்று அவர் கூறியிருந்தார்.

இது குறித்து பேசிய பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி, கொவிட் -19 பாதிப்பைத் தடுக்க மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் தங்களது சொந்த நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை வடிவமைக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

#TamilSchoolmychoice

” மத்திய அரசாங்கம் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் மீது கொள்கைகளை விதிக்க முடியாது.” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கொவிட் -19 பாதிப்பை சமன் செய்வதில் மாநில அரசும் உள்ளூர் அதிகாரிகளும் மிகவும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதி செய்வதற்காகவே இது என்று அவர் கூறினார்.

மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட முடியும் என்றாலும், அது ஆலோசனை மற்றும் தகவல் பகிர்வு மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

“(மாநில) மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் திறம்பட (அவர்கள்) தொற்று பரவுவதைத் தடுக்க தங்கள் சொந்த நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை வெளியிட வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.

எனவே, தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மத்திய அரசின் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்குமாறு மாநில அரசுக்கு அழைப்பு விடுப்பது சரியானது அல்ல என்றும் இராமசாமி கூறியிருந்தார்.