Home நாடு பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

232
0
SHARE
Ad
சௌ கோன் இயோ

ஜோர்ஜ்டவுன் : நடப்பு பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ மீண்டும் ஜசெக பினாங்கு மாநிலத் தலைவராகப் போட்டியிட மாட்டேன் எனக் கூறிவிட்டதால், அடுத்த பினாங்கு முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாநில முதலமைச்சராகத் கடந்த இரண்டு தவணைகளாக பதவி வகித்து வருகிறார் சௌ கோன் இயோ. அதே சமயத்தில் பினாங்கு மாநில ஜசெக தலைவராக 1999 முதல் பதவி வகித்து வருகிறார். பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் முதலமைச்சராவதற்கு முன்னர் பதவி வகித்து வந்தார்.

ஜசெக மாநிலத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என சௌ கூறியிருப்பதைத் தொடர்ந்து அவருக்குப் பின்னர் அடுத்த பினாங்கு முதலமைச்சர் யார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

சௌ கோன் இயோவுக்கும் முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கும் இடையில் பகிரங்கமான அளவில் கருத்து வேறுபாடுகள் வெடித்தது அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் சௌ மீண்டும் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க மாட்டார் என்ற ஆரூடங்கள் நீண்ட காலமாக நிலவி வந்தன.

இதற்கிடையில் தனக்கு அடுத்த முதலமைச்சரைத் தயார் செய்ய போதிய கால அவகாசம் ஜசெகவுக்குக் கிடைக்கும் எனவும் சௌ தெரிவித்தார்.

இதற்கிடையில் தவணைக் காலம் முடியும் வரையில் சௌ கோன் இயோவே முதலமைச்சராகத் தொடர்வார் என ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்திருக்கிறார்.

தற்போது மனித வள அமைச்சராக இருக்கும் ஸ்டீவன் சிம் சீ கியோங் பினாங்கு மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராகத் தயார்ப்படுத்தப்படுகிறார் என்ற ஆரூடங்கள் ஜசெக வட்டாரங்களில் நிலவி வருகின்றன. ஸ்டீவன் சிம் பினாங்கு புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது இருந்து வருகிறார்.