Home கலை உலகம் விஜய்யின் ‘கோட்’ – மலேசியாவில் மில்லியன் கணக்கில் முன்பதிவுகள்!

விஜய்யின் ‘கோட்’ – மலேசியாவில் மில்லியன் கணக்கில் முன்பதிவுகள்!

800
0
SHARE
Ad

சென்னை : புதிய கட்சி தொடங்கி தமிழ் நாட்டு அரசியலில் நுழைவு – கட்சி மாநாடு பரபரப்பு – யாருடன் கூட்டணி வைப்பார் என தினந்தோறும் எழுந்து வரும் ஆரூடங்கள் – இவற்றுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) உலகம் முழுவதும் வெளியாகிறது விஜய்யின் அடுத்த படமான, ‘கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கிறது கோட். படம் இன்று வெளியாகிறது என்றாலும் சில நாட்களுக்கு முன்பிருந்தே உலகம் முழுவதும் இணையம் மூலம் படத்தின் நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகி வந்தன. இந்தியாவிலும் அனைத்துலக அளவிலும் இதற்கு முன் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் நுழைவுச் சீட்டுகள் இணையம் மூலம் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மலேசியாவில் மட்டும் இதுவரையில் சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய நுழைவுச் சீட்டுகள் இணையம் வழி திரையரங்குகளில் விற்பனையாகியிருப்பதாக அதிகாரபூர்வமற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியாகி கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. இன்றுவரையில் யூடியூப் தளத்தில் மட்டும் 48 மில்லியன் பார்வையாளர்களை கோட் முன்னோட்டம் ஈர்த்திருக்கிறது.

விஜய் புதிய கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் கோட் வெளியாவதால் படம் வெற்றி பெறுமா என உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. படம் வெற்றி பெற்றால், விஜய்யின் செல்வாக்கு மேலும் அரசியலில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

கோட் படத்தில் இடம் பெறும் ‘மட்ட மட்ட’ என்ற பாடலின் காணொலியும் சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.