Home நாடு பினாங்கு மாநில ஜசெக தேர்தல்: அதிகரிக்கும் வெப்பம்! லிம் குவான் எங் அணியினர் வெற்றி பெறுவார்களா?

பினாங்கு மாநில ஜசெக தேர்தல்: அதிகரிக்கும் வெப்பம்! லிம் குவான் எங் அணியினர் வெற்றி பெறுவார்களா?

198
0
SHARE
Ad

*பினாங்கு மாநில ஜசெக தேர்தல் முடிவுகள் அடுத்த     முதலமைச்சரை நிர்ணயிக்கும் என எதிர்பார்ப்பு!

*லிம் குவான் எங் அணியினர் வெற்றி பெறுவார்களா?

*வெற்றிபெறப் போகும் இந்திய வேட்பாளர்கள் யார்?

#TamilSchoolmychoice

ஜோர்ஜ் டவுன்: தற்போது நாடு முழுமையிலும் மாநில அளவிலான ஜசெக கட்சியின் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு காலத்தில் ஜசெக எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிக பரபரப்பு இல்லாமல் நடைபெற்ற இந்த மாநில தேர்தல்கள் – இப்போதோ பரபரப்பின் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 22-ஆம் தேதி பினாங்கு மாநிலத்திற்கான கட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதன் காரணமாக தேர்தல் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் அந்த மாநிலத்தில் ஜசெக தலைவர்களின் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.

நடப்பு முதல்வர் சௌ கோன் இயோ ஜசெக தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டார். அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவராக வெற்றி பெறுபவர் அடுத்த பினாங்கு முதலமைச்சராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பினாங்கு மாநில முன்னாள் முதல்வர் லிம் குவான் எங், தனக்கென ஓர் அணியை அமைத்துக் கொண்டு வாக்கு வேட்டையாடி வருகிறார். பினாங்கு மாநிலத்தில் ஜசெக கட்சிக்கான 15 செயலவையினருக்கான தேர்தலில் 31 வேட்பாளர்கள் களம் குதித்துள்ளனர்.

அவர்களில் மனிதவளத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம், பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ, லிம் குவான் எங் சகோதரியும் துணை அமைச்சருமான லிம் ஹூய் யிங், பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஹோங் வாய், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர், பாகான் சட்டமன்ற உறுப்பினர் குமரன் ஆகியோரும் அடங்குவர்.

இந்த மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த முதலமைச்சர் ஆக வருவதற்கு மூவர் குறி வைத்துள்ளனர் என கணிக்கப்படுகிறது. ஸ்டீவன் சிம், லிம் ஹூய் யிங், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஹோங் வாய் ஆகியோரே அந்த மூவர்.

இதற்கிடையில் பினாங்கு மாநில ஜசெக தேர்தலில் போட்டியிடும் இந்தியர்களில் வெற்றி பெறப் போகிறவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் என் ராயர் மற்றும் பாகான் சட்டமன்ற உறுப்பினர் குமரனும் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள்.  பினாங்கு ஆட்சி குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. செனட்டர் லிங்கேஸ்வரனும் ஜசெக மாநிலத் தேர்தலில் போட்டியிடவில்லை.