Home One Line P1 பிரதமர், தேசிய கூட்டணியை விமர்சித்தது தொடர்பாக சைட் சாதிக் விசாரிக்கப்படுவார்

பிரதமர், தேசிய கூட்டணியை விமர்சித்தது தொடர்பாக சைட் சாதிக் விசாரிக்கப்படுவார்

522
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் மார்ச் மாதம் பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை விமர்சித்த பேட்டி தொடர்பாக காவர் துறையினர் இன்று அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவர்.

மார்ச் 6-ஆம் தேதி அல்ஜசீராவின் அப்பிரண்ட் பேட்டியில் தோன்றியதற்காக விசாரிக்கப்பட இருப்பதாக தனக்கு புக்கிட் அமானிலிருந்து ஜூன் 13 அன்று கடிதம் கிடைத்ததாக சைட் சாதிக் கூறினார்.

“நான் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பை தருவேன்.” என்று சைட் சாதிக் கூறினார்.

#TamilSchoolmychoice

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குநர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

தேசத் துரோகச் சட்டம் 1948-இன் பிரிவு 4 (1) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998- இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் சைட் சாதிக் தற்போது விசாரணையில் உள்ளார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

பிரிவு 4 (1)- இன் கீழ் முதல் குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 5,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பிரிவு 233- இன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்ளக்கூடும்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் குற்றவாளிக்கு ஒவ்வொரு நாளும் 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தேசிய கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு ஒளிபரப்பப்பட்ட நேர்காணலின் போது, ​​சைட் சாதிக், “ஊழல்வாதிகளுடன்” மொகிதின் சதி செய்ததில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

புதிய நிர்வாகத்தை “சட்டவிரோதமானது” என்றும் “பின் வாசல்” அரசாங்கம் என்றும் அவர் விவரித்திருந்தார்.