கோலாலம்பூர்: தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் நோ ஒமார், பெட்ரோனாஸ் துணை நிறுவனமான எம்ஐஎஸ்சியில் தலைவராக நியமனம் செய்யப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு அப்பதவியிலிருந்து விலகினார்.
எம்ஐஎஸ்சி இன்று ஓர் அறிக்கையில் இது குறித்து அறிவித்தது. இந்த பதவி விலகல் நேற்று நடைமுறைக்கு வந்தது என்றும் அது அறிவித்தது.
“டான்ஸ்ரீ நோ ஒமார் பிரதமர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பதவி விலக முடிவு செய்தார்.
“டான்ஸ்ரீ நோ ஒமார் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதற்காக எம்ஐஎஸ்சியின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாக குழுவை வாழ்த்தினார்.
“எம்ஐஎஸ்சியின் இயக்குநர்கள் குழுவும், டான்ஸ்ரீ நோ ஒமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரது பதவி விலகல் இன்று புர்சா மலேசியா வலைத்தளத்திலும் அறிவிக்கப்பட்டது.
ஜூன் 1-ஆம் தேதி, நகர் நல்வாழ்வு, வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சரான நோ எம்ஐஎஸ்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.