Home One Line P1 கொவிட்19: மூன்று புதிய சம்பவங்கள் பதிவு, ஒருவர் மலேசியர்

கொவிட்19: மூன்று புதிய சம்பவங்கள் பதிவு, ஒருவர் மலேசியர்

497
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,590-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 3 பாதிப்புகளில், 2 பேர் உள்ளூரிலேயே தொற்று கண்ட வெளிநாட்டினர். ஒருவர் மலேசியர்.

#TamilSchoolmychoice

இன்று 9 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,186-ஆக உயர்ந்தது.

283 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.