புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,590-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 3 பாதிப்புகளில், 2 பேர் உள்ளூரிலேயே தொற்று கண்ட வெளிநாட்டினர். ஒருவர் மலேசியர்.
இன்று 9 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,186-ஆக உயர்ந்தது.
283 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.