Home One Line P2 அமெரிக்கா : ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள்

அமெரிக்கா : ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள்

644
0
SHARE
Ad

வாஷிங்டன் – இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேயடியாக ஒரே நாளில் 40 ஆயிரம் புதிய கொவிட்-19 பாதிப்புகள் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க மாநிலங்களில் ஏறத்தாழ பாதி மாநிலங்கள் கொவிட்-19 பாதிப்புகள் எண்ணிக்கை உயர்ந்ததாக அறிவித்தன.

சில மாநிலங்களில் மதுபான விடுதிகள் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கர்கள் வருகை தருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய பரிசோதனை நடைமுறைகளை வெள்ளை மாளிகை ஆலோசித்து வருவதாகவும் சுகாதாரத் துறைக்கான பொறுப்பாளரான டாக்டர் அந்தோணி பவுச்சி அறிவித்தார்.

இதுவரையில் அமெரிக்கா 2.51 மில்லியன் கொவிட்-19 பாதிப்புகளைப் பதிவு செய்திருக்கிறது. மரண எண்ணிக்கை 127 ஆயிரமாகும். நேற்று ஒரு நாளில் மட்டும் 599 மரணங்கள் பதிவாயின.