ஜெனீவா: புதன்கிழமை பிற்பகுதியில் உலகளாவிய கொவிட்-19 சம்பவங்கள் 12 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்று நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 548,822- ஐ எட்டியுள்ளது. மேலும், 6.5 மில்லியன் பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
3 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடாக உள்ளது. அதே நேரத்தில் அதன் இறப்பு விகிதம் 132,000- ஐ தாண்டியுள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கொவிட்19 சம்பவங்கள் மற்றும் இறப்புகளைக் கொண்ட நாடாக பிரேசில் உள்லது. அங்கு 1.71 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, அந்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரஷ்யா, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாகும்.
இந்த தொற்று கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியதிலிருந்து 188 நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் பரவியுள்ளது.