Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் ‘டோலிசுமாப்’ மருந்து பயன்படுத்த அனுமதி

கொவிட்19: இந்தியாவில் ‘டோலிசுமாப்’ மருந்து பயன்படுத்த அனுமதி

709
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 800,000-ஐ கடந்திருக்கக்கூடிய நிலையில். உயிரிழப்பு எண்ணிக்கையும் 22,000-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மிதமான மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தடிப்புத் தோல் அழற்சியைக் குணப்படுத்த பயன்படும் ‘டோலிசுமாப்’ (Tocilizumab) என்ற மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான சுவாசக் பிரச்சனைக் கொண்ட நோயாளிகளுக்கும் இம்மருந்தினை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் டாக்டர் வி.ஜி. சோமானி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆயினும், இந்த மருந்தினைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வொரு நோயாளியின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொவிட்19 பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களான, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு, நாட்டின் பாதிப்பு எண்ணிக்கையை கூட்டிக் கொண்டே போகிறது. இந்த அதிகரிப்பின் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது.