Home One Line P1 பாலின அவதூறாகப் பேசி, அப்துல் அசிஸ் சர்ச்சை

பாலின அவதூறாகப் பேசி, அப்துல் அசிஸ் சர்ச்சை

704
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று மக்களவையில் அவைத் தலைவர் நீக்கம் மீதான தீர்மானம் குறித்த விவாதங்களால் ஏற்பட்ட அமளிக்கு மத்தியில், பத்து காவான் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டுவின், நிறம் தொடர்பான கருத்தினை வெளியிட்டு பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹிம் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

கஸ்தூரி பேசும்போது, அப்துல் அசிஸ் அவர் “இருட்டாக இருக்கிறார், பார்க்க முடியவில்லை” என்று குறிப்பிட்டார். அவரை “கொஞ்சம் முகப்பூச்சுத் தூளை போடுமாறு” கூறினார்.

இந்த கருத்து தொடர்பாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர், ஆர்.எஸ்.என். ராயர் சபாநாயகர், அசிசை மன்னிப்புக் கேட்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“உங்களிடம் ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். அத்தகைய மொழியைப் பயன்படுத்த அவரை அனுமதிக்க முடியாது. பாலிங் தனது கருத்துக்களைத் திரும்பப் பெறவும், மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட நான் சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன், ” என்று அவர் கூறினார்.

ஆனால், அசிஸ் “நானும் இருட்டாக இருக்கிறேன், பார்க்க முடியாது. எனவே இது ஒரு பிரச்சனை அல்ல. நானும் இருட்டாக இருந்தால் எப்படி கருத்தை திரும்பப் பெறுவது? ” என்று பதிலளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சபாநாயகர் இம்மாதிரியான பாலின ரீதியிலான அவதூறுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அசிஸ் பின்னர் தனது கருத்துக்களை திரும்பப் பெற்றார்.

எனினும் மன்னிப்பு கேட்கவில்லை. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்விவாதங்களிலும், அமளியிலும் ஈடுபட்டனர்.

திடீரென எழுந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் தக்கியூடின் ஹாசான் நாடாளுமன்றத்தை நாளைக்கு ஒத்திவைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து இன்றைய நாடாளுமன்றம் ஒரு முடிவுக்கு வந்தது.