புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,725-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 சம்பவங்களில், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் அறுவர். உள்நாட்டில் ஒருவர் தொற்றுக் கண்டுள்ளார்.
இதனிடையே, இன்று ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8520-ஆக உயர்ந்தது.
நாட்டில் மொத்தம் 83 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மூவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் யாரும் மரணமடையவில்லை.