Home One Line P2 அலாஸ்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

அலாஸ்காவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

661
0
SHARE
Ad

ஜூனோ: அலாஸ்கா பெர்ரிவில்லிலிருந்து தென்கிழக்கில் 84 கி.மீ தூரத்தில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்க சுனாமி எச்சரிக்கை முறையை அடிப்படையாகக் கொண்டது.

அப்பகுதியில் வசிப்பவர்கள் “உயர்ந்த பகுதிகளுக்கு” செல்லுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

#TamilSchoolmychoice

“படுக்கை மற்றும் திரைச்சீலைகள் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன. மிக நீண்ட நிலநடுக்கம் போல் உணர்ந்தேன்! ” என்று சாட்சி ஒருவர் கூறினார்.

தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பத்திற்கு இந்த எச்சரிக்கை அமலில் உள்ளது.

வட அமெரிக்காவில் உள்ள மற்ற அமெரிக்க, கனேடிய பசிபிக் கடற்கரைகளுக்கும் சுனாமி அபாயத்தின் அளவு மதிப்பீடு செய்யப்படுவதாக ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

“பூகம்ப மையத்தின் 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு, அபாயகரமான சுனாமி அலைகள் சாத்தியமாகும்” என்று எச்சரிக்கை கூறுகிறது.