Home One Line P1 கட்சித் தாவலைத் தீர்க்க தனிநபர்கள் அல்லாமல் கட்சிகள் போட்டியிட வேண்டும்!

கட்சித் தாவலைத் தீர்க்க தனிநபர்கள் அல்லாமல் கட்சிகள் போட்டியிட வேண்டும்!

469
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடையே கட்சித் தாவல் பிரச்சனையை தீர்க்க வாக்காளர்கள் ஒரு தனிப்பட்ட வேட்பாளருக்கு பதிலாக, ஒரு கட்சியைத் தேர்வு செய்ய வேண்டும்.

இது தொடர்பான ஒரு புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் முன்மொழிந்தார்.

1958-ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவதன் மூலம் கட்சி பட்டியல் முறை போன்ற புதிய முறையை அறிமுகப்படுத்த முடியும் என்று முகமட் நஸ்ரி கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த முறையின் மூலமாக, வாக்காளர்கள் வாக்குச் சீட்டில் கட்சியை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் மக்கள் பிரதிநிதியை தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி கட்சித் தலைமையுடன் உடன்படவில்லை, வெளியேற விரும்பினால், அந்த இடம் கட்சியின் சொத்தாகவே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

“எடுத்துக்காட்டாக, நான் தேசிய முன்னணியை விட்டு வெளியேறினால், எனது கட்சி வேறு ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யலாம். நாம் இதைச் செய்தால், கட்சித் தாவல் பிரச்சினை எழாது.

“சட்டத்தில் திருத்தம் செய்தால், அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தடுக்க முடியும். ஊழலையும் எதிர்த்துப் போராட முடியும். தனித்தனியாக போட்டியிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி பணத்தைக் கொண்டு ஊழலுக்கான வழியை ஏற்படுத்த முடியும், ” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.