Home One Line P1 மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சம உரிமைக் கொண்ட பங்காளிகள்

மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சம உரிமைக் கொண்ட பங்காளிகள்

530
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் சபாவும் சரவாக்கும் சம உரிமை உள்ள பங்காளிகள் என்று சபா துணை முதல்வர் டத்தோஸ்ரீ வில்பிரட் மடியஸ் டாங்காவ் நினைவுபடுத்தியுள்ளார்.

திங்கட்கிழமை பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் கூறிய கருத்தை குறிப்பிட்டு வில்பிரட் இதனைக் கூறினார்.

மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாலும், அவர்கள் “தானா மெலாயுவில்” வாழ்கிறார்கள் என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மலேசியாவில் அவர்கள் அசல் குடிமக்கள் (பெண்டுடுக் அசால்) என்பதை மலேசியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாஜுடின் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

தீபகற்ப மலேசியா ‘தானா மெலாயு’ என்று அழைக்கப்பட்டாலும், 1963- ஆம் ஆண்டில் சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூரில் இணைந்து மலேசியா என்ற தேசமாக மாறியது. தானா மெலாயு இனி இல்லை என்று வில்பிரட் கூறினார்.

“விவாதத்தின் போது பாசிர் சாலாக் கூறியது வரலாற்று ரீதியாக தவறானது. இது தேசிய ஒற்றுமைக்கு மோசமானது மற்றும் 2030 தூர நோக்குத் திட்டத்திற்கு எதிர்ப்பானது

“இதன்மூலம் நான் மற்ற மலேசியர்களுடன், குறிப்பாக சபா, சரவாக் மக்களுடன் சேர்ந்து பாசிர் சாலாக் கருத்துக்களை எதிர்க்கவும் நிராகரிக்கவும் செய்கிறேன்.

“பாசிர் சாலாக் போன்றவர்கள் தீபகற்ப மலேசியா மட்டுமே மலேசியா என்று நினைப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது” என்று அவர் புதன்கிழமை நாடாளுமன்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அமைச்சர்கள், அரசு நிறுவனங்களின் தலைவரும் தாஜுடின் போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்தால், அது சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் வளர்ச்சியில் இருந்து விலக்க வழிவகுக்கும் என்று வில்பிரட் கூறினார்.