புது டில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேர் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
648 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,192,915- ஆக உயர்ந்துள்ளது. குறைந்தது 753,050 பேர் இதுவரையிலும் குணமடைந்துள்ளனர்.
28,732 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு, கொவிட்19 தொற்றால் மரணமுற்றவர்களின் விகிதம் மிகக் குறைவானது என்று ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொவிட்19 தடுப்பூசியான கோவாக்சின் மனிதர்களிடம் சோதனைகளை தொடங்கியதாக திங்கட்கிழமையன்று டில்லி எய்ம்ஸ் இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சியாளர்கள் முதல் தரவுத் தொகுப்பிற்கு வருவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று அவர் கூறினார். அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.