Home One Line P1 கொவிட்19: 11 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன

கொவிட்19: 11 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,094-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 11 சம்பவங்களில் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், 6 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டவர்கள்.

#TamilSchoolmychoice

இன்று 19 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,803 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 166 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் அவசரப் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மரண எண்ணிக்கை தொடர்ந்து 125- ஆக இருந்து வருகிறது.