இந்நிகழ்வில் 8 ஆண்டுகள் சிலம்ப கலையை முறையாகவும் கட்டொழுங்குடனும் கற்று தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு கருப்பு பட்டயமும் கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்படும்.
இவ்வரங்கேற்ற விழாவிற்கு அகில இந்திய ‘கராத்தே டோ’ சங்கத்தின் தலைவரும் , சென்னை நகரின் முன்னாள் மேயருமாகிய கராத்தே தியாகராஜன், மலேசிய சிலம்ப கலையின் சிற்பி மகாகுரு ஸ்ரீ சு.ஆறுமுகம் மற்றும் பல ஆசிரியர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழு தலைவர் சிலம்ப ஆசிரியர் கு.அன்பரசன், பொதுமக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.
மேல் விவரங்களுக்கு, கு. அன்பரசன் 012-3386797 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.