Home நாடு மாணவர்களின் சிலம்ப அரங்கேற்ற விழா

மாணவர்களின் சிலம்ப அரங்கேற்ற விழா

777
0
SHARE
Ad

rathana-valli-ammaகோலாலம்பூர், ஏப்ரல் 15- எதிர்வரும் 20.4.2013 தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் செமினி பொது மண்டபத்தில் சிலம்பக் கோர்வை கழக மாணவர்களின் சிலம்ப அரங்கேற்ற  விழா மனித நேய மாமணி ரத்னவள்ளி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் 8 ஆண்டுகள் சிலம்ப  கலையை முறையாகவும் கட்டொழுங்குடனும்  கற்று தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு கருப்பு பட்டயமும் கேடயமும்  வழங்கி சிறப்பிக்கப்படும்.

இவ்வரங்கேற்ற விழாவிற்கு அகில இந்திய ‘கராத்தே டோ’ சங்கத்தின் தலைவரும் , சென்னை நகரின் முன்னாள்  மேயருமாகிய கராத்தே தியாகராஜன், மலேசிய சிலம்ப கலையின்  சிற்பி மகாகுரு ஸ்ரீ சு.ஆறுமுகம் மற்றும் பல ஆசிரியர்களும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice

இவ்விழாவின் ஏற்பாட்டுக் குழு தலைவர் சிலம்ப ஆசிரியர் கு.அன்பரசன், பொதுமக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.

மேல் விவரங்களுக்கு, கு. அன்பரசன் 012-3386797 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.