காரகாஸ், ஏப்ரல் 15- தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது.வெனிசுலா அதிபராக இருந்தவர் யூகோ சாவெஸ்.
புற்றுநோய் காரணமாக கடந்த மாதம் இறந்தார். இதையடுத்து, அந்நாட்டில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. துணை அதிபராக இருந்த நிக்கோலஸ் மடூரோ (படம்) இடைக்கால அதிபராக உள்ளார்.
இவர் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் ஹென்ரிக் கேப்ரில்ஸ் போட்டியிடுகிறார்.
உணவு பற்றாக்குறை, பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து கேப்ரில்ஸ் பிரசாரம் செய்தார்.தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டின் வறுமையை பாதியாக குறைப்பதாக தற்காலிக அதிபர் மடூரோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று வெனிசுலாவில் தேர்தல் நடைபெற்றது. இரண்டு கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெறுபவர் வரும் 19ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.