Home 13வது பொதுத் தேர்தல் கங்கார் நாடாளுமன்ற தொகுதிக்கு பிகேஆர் வேட்பாளராக டாக்டர் ஜுவாண்டா ஜெயா தேர்வு

கங்கார் நாடாளுமன்ற தொகுதிக்கு பிகேஆர் வேட்பாளராக டாக்டர் ஜுவாண்டா ஜெயா தேர்வு

603
0
SHARE
Ad

600270_493711214026619_1454401141_nகங்கார்,ஏப்ரல் 15 – பொதுத்தேர்தலில் பெர்லிஸ் மாநிலம் கங்கார் நாடாளுமன்ற தொகுதிக்கு பிகேஆர் வேட்பாளராக டாக்டர் ஜுவாண்டா ஜெயா(படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அம்மாநில பிகேஆர் தலைவர் முகமத் பைசோல் ரஹ்மான் கூறுகையில், “பெர்லிஸ் மாநிலத்தில் 50,000 வாக்காளர்கள் நிறைந்த மிகப் பெரிய தொகுதியாக கங்கார் நாடாளுமன்றம் திகழ்கிறது. அதில் அநேக வாக்காளர்கள் தற்போது பிகேஆர் கட்சிக்கு ஆதரவளிப்பவர்களாக உள்ளனர். எனவே வரும் பொதுத்தேர்தலில், டாக்டர் ஜுவாண்டா தேசிய முன்னணி வேட்பாளருக்கு எதிராக களமிறங்கி, மாபெரும் வெற்றியடைவார் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஜுவாண்டாவை, தனது கட்சியுடன் இணைத்துக்கொள்ள முன்பு தேசிய முன்னணியும், மக்கள் கூட்டணியும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கங்கார் தொகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் தற்போதுள்ள வாக்காளர் நிலவரம்,

கங்கார் நாடாளுமன்றம்