Home உலகம் அமெரிக்க அதிகாரிகளை உடனடியாக வெனிசுலாவை விட்டு வெளியேற உத்தரவு!

அமெரிக்க அதிகாரிகளை உடனடியாக வெனிசுலாவை விட்டு வெளியேற உத்தரவு!

1423
0
SHARE
Ad

வாஷிங்டன்: வெனிசுலா நாட்டினில் நிலைமை கட்டுபாட்டை இழந்து வரும் வேளையில், அமெரிக்க கொள்கைகளின்படி அந்நாட்டில் நிலைமை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் அமெரிக்க அதிகாரிகளை திரும்ப பெறுவது என்ற முடிவை அமெரிக்கா எடுத்துள்ளதாக பாம்பியோ தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலாவில் நிலைமை மோசமான நிலையை அடைந்துள்ளதால், அமெரிக்கா அதன் அதிகாரிகளை கரகாஸில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு வெனிசுலாவை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவில் அதிபர் மடுரோ அதிகாரப் போட்டியில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். அதனால் பொருளாதார நெருக்கடியில் வெனிசுலா சிக்கியுள்ளது