Home Video சிந்துபாத் படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

சிந்துபாத் படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

1306
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சிந்துபாத். இந்தப் படத்தினை இயக்குனர் எஸ்.யு. அருண் குமார் இயக்கி வருகிறார். முதல் முறையாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இத்திரைப்படத்தில் திருடன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் நடிகை அஞ்சலி, விஜய் சேதுபதிக்கு இணையாக கை கோர்க்கிறார். வாசன் மூவிஸ் மற்றும் கே புரோடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகி இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ள வசனமொன்று இரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.அனைவரின் வாழ்க்கையிலும் பிரச்சனை வருவது சகஜம்தான். ஆனால், அந்த பிரச்சனையைக் கண்டு ஓடாமல், அதனை எதிர்த்து ஓட விடுவதுதான் சிறந்தது”என்ற அந்த வசனம் இரசிகர்களால் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.சிந்துபாத் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ் காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice