குஜராத்: அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின், உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று செவ்வாய்க்கிழமை குஜராத் மாநிலத்தில் தொடங்கினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கோட்டையாகக் கருதக்கூடிய குஜராத்தில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். தேர்தல் காலங்களில் மக்கள் விழிப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் எனவும், தங்கள் கையில் உள்ள ஓட்டு என்னும் ஆயுதத்தை பொறுப்புணர்வோடு பயன்படுத்த வேண்டும் எனவும் பிரியங்கா அந்த பிரச்சாரத்தில் கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்த உரையின் போது, அவர் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை கடுமையாக சாடிப் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.