
கரகாஸ் – தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடுரோ நேற்று சனிக்கிழமை கரகாஸ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென பாதுகாப்பு அதிகாரிகளால் மேடையிலிருந்து அகற்றப்பட்டார்.
அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த அவரது மனைவி எதையோ மேலே நோக்கி அதிர்ச்சியுடன் பார்க்க, அதனைத் தொடர்ந்து அவரும் அவரது கணவரான அதிபர் மடுரோவும் மேடையிலிருந்து அகற்றப்பட்டனர்.
பயங்கரவாதிகள் அவர் மீது மேற்கொண்ட கொலை முயற்சி இதுவென அரசாங்கத் தரப்பு பின்னர் அறிவிப்பு வெளியிட்டது.
பொலிவியா தேசியப் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்ட 81-வது ஆண்டு விழாவில் தொலைக்காட்சி நேரலையாக இராணுவ அணிவகுப்புடன் கூடிய இந்த நிகழ்ச்சியில் அதிபர் மடுரோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மேடைக்கு அருகில் வெடிகுண்டு வெடித்ததால் அதிபர் மேடையிலிருந்து அகற்றப்பட்டார் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.