கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று 31 புதிய கொவிட் 19 சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இதில் 28 உள்ளூர் நோய்த்தொற்றுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மூன்று சம்பவங்கள் அடங்கும்.
சபாவில் 25 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. லாஹாட் டாத்து பெந்தேங் தொற்றுக் குழுவிலிருந்து 17 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கெடாவில் ஒரே ஒரு சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் நெகேரி செம்பிலானில் பூங்கா தொற்றுக் குழு சம்பந்தப்பட்ட நான்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 9,946 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏழு பேர் இன்று வெளியேற்றப்பட்டனர். மொத்தமாக 9,203 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 615 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.