Home One Line P1 பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி முகமட் கொவிட்19 தொற்றிலிருந்து மீண்டுள்ளார்

பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி முகமட் கொவிட்19 தொற்றிலிருந்து மீண்டுள்ளார்

496
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் 19 நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளதாக  பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி முகமட்  தெரிவித்துள்ளார். அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

“கொவிட்19- இலிருந்து நான் முழுமையாக குணமடைந்துவிட்டேன் என்பது உறுதி செய்யப்பட்டதால், இன்று பிற்பகல் நான் மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டேன்,” என்று அவர் கூறினார்.

அண்மையில், அமைச்சர் கொவிட்19 தொற்றுக்கு ஆளானதை அடுத்து, அவர் கலந்து கொண்ட சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டனர்.