Home One Line P1 ‘இது முடிவல்ல, நம்பிக்கையை இழக்க வேண்டாம்’- ஷாபி அப்டால்

‘இது முடிவல்ல, நம்பிக்கையை இழக்க வேண்டாம்’- ஷாபி அப்டால்

700
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பொதுவில் அவ்வளவாக தலைக்காட்டாமல் இருந்த முன்னாள் சபா முதல்வர் ஷாபி அப்டால், ஆதரவாளர்களை நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும், இது கட்சியின் முடிவு அல்ல என்றும் குறிப்பிடும் இரண்டு நிமிட காணொலியை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நடந்த மாநிலத் தேர்தலில் தங்கள் உரிமையை நிலைநாட்டிய சபா மக்களுக்கும் முன்னாள் முதல்வர் நன்றி தெரிவித்ததோடு, வாரிசான் பிளாசுக்கு தங்கள் ஆதரவை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

“எதிர்காலத்தில் உங்கள் அரசாங்கமாக திரும்புவதற்கான எண்ணங்களுடன் எங்கள் கடின உழைப்பு தொடரக்கூடிய வகையில் எமது மற்றும் கட்சிக்கு எங்கள் முயற்சிகளையும் மனப்பான்மையையும் அதிகரிக்க இது ஒரு உத்வேகமாகவும் ஊக்கமாகவும் இருந்துள்ளது.

#TamilSchoolmychoice

“நாங்கள் சபா மக்களுக்காக இந்த போராட்டத்தை தொடர்ந்தால் எங்கள் மீது உங்கள் நம்பிக்கை நிலைத்திருக்கும் என்று நம்புகிறேன். இது நிச்சயமாக எங்கள் கட்சியின் முடிவு அல்ல, நாங்கள் இந்த போராட்டத்தைத் தொடருவோம். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை அதிகரிப்போம், ”என்று அவர் கூறினார்.

செனால்லாங் சட்டமன்ற உறுப்பினர் சபா மக்களிடம் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்போது கவலைப்பட வேண்டாம், சவால்களை எதிர்கொள்ள பயப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

தீபகற்பத்தில் நிச்சயமற்ற அரசியல் நிலைமைக்கு மத்தியில் இந்த காணொலி வந்துள்ளது. வாரிசானின் கூட்டணிக் கட்சியான பிகேஆர், தலைவர் அன்வார் இப்ராகிம், அரசாங்கத்தை அமைப்பதற்கு 120- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறினார்.