Home One Line P2 ஆஸ்ட்ரோவில் திகில், சிலிர்ப்பூட்டும் திரைப்படங்கள்

ஆஸ்ட்ரோவில் திகில், சிலிர்ப்பூட்டும் திரைப்படங்கள்

728
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவின் அலைவரிசைகளான ஆஸ்ட்ரோ பெஸ்ட் (Astro Best), ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் (Astro First) மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஹாலிவுட், ஆசிய நாடுகளின் திரைப்படங்களையும், உள்ளூர் திகில் திரைப்படங்களையும் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து பார்த்து மகிழலாம்.

ஆஸ்ட்ரோவில் ‘Turn On The Screams’ மூலம் திகில் நிறைந்த சிலிர்ப்பையும் சுவாரசியத்தையும் அனுபவிக்கலாம்.

‘TURN ON THE SCREAMS’ பற்றிய விவரங்கள் :

  • இந்த அக்டோபரில், திகில் திரைப்படங்களின் இரசிகர்கள் சிறந்த ஹாலிவுட், ஆசிய மற்றும் உள்ளூர் த்ரில்லர்களை ‘Turn On The Screams’ மூலம் Astro First, Astro Best, ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வழியாக கண்டு மகிழலாம்.
  • அனைத்து வாடிக்கையாளர்களும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம்:

o      விருது பெற்ற திகில் திரில்லர், ‘Get Out’; உளவியல் திகில், ‘Us’; அதிரடி-திகில், ‘The Hunt’, நாடக-திகில், ‘Unfriended’; அமானுஷ்ய திகில்கள், ‘The Conjuring’, ‘The Conjuring 2’, ‘Truth or Dare’, கற்பனை த்ரில்லர், ‘Doctor Sleep’ மற்றும் பல உள்ளிட்ட  மிகப்பெரிய ஹாலிவுட் திகில் பிளாக்பஸ்டர்கள்;

#TamilSchoolmychoice

o      உள்ளூர் நகைச்சுவை-திகில், ‘Kelaster’ மற்றும் ‘Takut Ke Tak?’; தாய்லாந்து திகில் ‘Pee Nak 2’ மற்றும் ‘Check-in Shock’; தைவானிய அமானுஷ்ய உளவியல் த்ரில்லர், ‘Detention’; விருப்பமான கோரியா பேய் திரைப்படங்கள், ‘Gonjiam Haunted Asylum’, ‘A Tale of Two Sisters’; மற்றும் பல உள்ளிட்ட உள்ளூர் மற்றும் ஆசிய திகில் திரைப்படங்கள்.

  • கூடுதலாக, வாடிக்கையாளர்கள் சோனி 4K Ultra HD ஸ்மார்ட் டிவி (Sony 4K Ultra HD Smart TV), சோனி போர்ட்டபிள் ப்ளூடூத் ஒலிப்பெட்டி (Sony Portable Bluetooth Speaker), சோனி ஒலிவாங்கிகள் (Sony Headphones) மற்றும் சோனி வாலெட்டுகள் (Sony Wallets) உள்ளிட்ட அற்புதமான பரிசுகளை 2020 அக்டோபர் 23 முதல் நவம்பர் 13 வரை ‘Scream and Win’ போட்டியின் மூலம் வெல்லும் அரிய வாய்ப்பையும் பெறலாம்.
  • ‘Paranormal Activity’, ‘Insidious’, ‘Sinister’, ‘The Purge’, ‘Get Out’ மற்றும் பல பிரபலமான திகில் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு புகழ் பெற்ற Blumhouse Television, ஹாலிவுட் ஸ்டுடியோவின் புதிய திகிலூட்டும் ஆந்தாலஜி தொடர்களான ‘Into The Dark’ –1 முதல் 5 தொகுதிகள் வரை கட்டணம் செலுத்தி பெறுதல், அல்லது பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்வதன் வழி வாடிக்கையாளர்கள் வெற்றி பெறுவதற்கான அரிய வாய்ப்பைப் பெறலாம்.
  • Blumhouse-இன் பிரபலமான அலறல்களும் பயங்களும் நிறைந்த 15 பொழுதுபோக்கு திரைப்படங்களை ‘Into the Dark’ கொண்டுள்ளது. யு.எஸ் பார்வையாளர்களை உற்சாகப்படுத்திய மற்றும் மகிழ்வித்த, இந்தத் திரைப்படங்களைத் தற்போது Astro Best, ஆன் டிமாண்ட் ஸ்டோர் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பெறலாம்.
  • இச்சிறந்த திகில் தொடரை திகில் பட இரசிகர்கள் கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • மேல் விபரங்களுக்கு, promotions.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.