அங்காரா: ஏகன் கடலில் ஏற்பட பயங்கர நிலநடுக்கம் துருக்கி, கிரேக்கம் நாடுகளை தாக்கியுள்ளது. 6.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கிரேக்க நாட்டில் உள்ள சாமோஸ் தீவில் இருந்து வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது. இந்த நில நடுக்கத்தின் அளவீட்டை வெவ்வேறாக அமெரிக்க, ஐரோப்பிய புவியியல் மையங்கள் கணக்கிட்டுள்ளன. ஐரோப்பிய புவியியல் மையம் 6.9 ஆகவும், அமெரிக்க புவியியல் மையம் 7 ஆகவும் பதிவு செய்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் இஸ்மிர் பகுதியில் நான்கு கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. இதில் இப்போதைக்கு 22 பேர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.