Home One Line P1 மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல்

மருத்துவ படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல்

603
0
SHARE
Ad

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்த இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும்.

#TamilSchoolmychoice

உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேதியும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவ படிப்புகளில் இணைவதற்கு தேசிய அளவிலான தகுதித் தீர்வு – நீட் – கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றி இருந்தது.