Home One Line P1 ‘எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது!- மகாதீர்

‘எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது!- மகாதீர்

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரான்சின் நிலைமை குறித்த தமது கருத்துக்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக சித்தரிக்கும் நோக்கத்துடன் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையின் 12- வது பத்தி இந்த விவகாரம் குறித்த முழு அறிக்கையின் சூழலுக்கு வெளியே வாசிக்கப்பட்டதாக மகாதீர் கூறினார்.

“அவ்வாறு செய்தவர்கள் பத்தியின் ஒரு பகுதியை மட்டுமே கேள்வி எழுப்பினர். ‘முஸ்லிம்களுக்கு கோபப்படுவதற்கும், கோடிக்கணக்கான பிரெஞ்சு மக்களைக் கடந்த காலங்களில் படுகொலை செய்வதற்கும் உரிமை உண்டு.

#TamilSchoolmychoice

“அவர்கள் அதையே பிடித்துக் கொண்டு பிரெஞ்சுக்காரர்களின் கொலையை ஊக்குவிப்பதாக கற்பனை செய்தார்கள்.

“அவர்கள் அந்த அறிக்கையை ஒட்டுமொத்தமாகப் படித்தால், குறிப்பாக அடுத்த வாக்கியம் ‘ஆனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இரத்த பழிவாங்கும் விதிகளை பின்பற்றவில்லை. முஸ்லிம்கள் அதைச் செய்ய மாட்டார்கள். பிரெஞ்சுக்காரர்களும் அதைச் செய்யக்கூடாது. பிரான்ஸ் தனது மக்களுக்கு மக்களின் உணர்வுகளை மதிக்கக் கற்பிக்க வேண்டும், “என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

அறிக்கையை மேற்கோள் காட்டி திசைத் திருப்பிய மற்றும் சூழலுக்கு வெளியே விளக்கம் அளித்ததன் காரணமாக, அவருக்கு எதிராக அறிக்கை வெளியிடப்பட்டது என்றும், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வன்முறையை ஊக்குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“எனது அறிக்கையின் எதிர்வினையால் ஊக்குவிக்கப்பட்டவை, முஸ்லிம்கள் மீது பிரெஞ்சு வெறுப்பைத் தூண்டுவதாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்லாம் குறித்த அறிக்கையைத் தொடர்ந்து பிரெஞ்சு அதிபரையை துன் மகாதீர் விமர்சித்தார்.

பிரெஞ்சு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரெஞ்சு அரிபர் இம்மானுவேல் மக்ரோனை மகாதீர் விமர்சித்தார். அவர் முஸ்லிம்களை பிரிவினைவாதிகள் என்று வர்ணித்ததோடு இஸ்லாத்தை “நெருக்கடி” மதம் என்றும் வர்ணித்தார்.

மலேசியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் ஆண்ட்ரூ கோல்ட்ஜினோவ்ஸ்கி கூறுகையில், மகாதீர் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று நம்பினாலும், தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற ஓர் அறிக்கை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றார்.

பிரெஞ்சு இனத் தாக்குதல்கள் குறித்து மகாதீரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மலேசியாவிற்கான அமெரிக்க தூதர் கமலா ஷிரின் லக்தீரின் விமர்சனத்தையும் பெற்றது.

“நைஸ் மற்றும் பாரிஸில் நடந்த பயங்கர தாக்குதல்களை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் பிரான்ஸ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“டாக்டர் மகாதீரின் சமீபத்திய அறிக்கையை நான் ஏற்கவில்லை. கருத்துச் சுதந்திரம் ஓர் உரிமை, வன்முறைக்கு அழைப்பு விடுப்பது இல்லை ” என்று கமலா வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், கோலாலம்பூரில் உள்ள ஜெர்மன் தூதரகம் டாக்டர் மகாதீர் பயன்படுத்திய மொழியைக் கண்டு திகைத்துப்போயுள்ளதாகக் கூறியது.

“ஜெர்மனி தனது நெருங்கிய நட்பு நாடான பிரான்சின் வேதனையையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறது” என்று அது வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.