கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, ஊழியர் சேமநிதி வாரிய (ஈபிஎப்) முதல் கணக்கு பங்களிப்பை திரும்பப் பெறுவதற்கான அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு அம்னோ அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்ட டுசுகி கூறுகையில், மக்கள் தங்கள் ஈபிஎப் சேமிப்பு மற்றும் பங்களிப்புகளை குறைந்தபட்சம் 5,000 ரிங்கிட் திரும்பப் பெற அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் அதன் வரம்பை 10,000 ரிங்கிட்டில் நிலை நிறுத்தலாம் என்றும் கூறினார்.
“உண்மை என்னவென்றால், கொவிட் -19 தொற்றின் போது, இந்த நேரத்தில் வாழ்க்கை எவ்வளவு வேதனையானது மற்றும் தடைபட்டது என்பது குறித்து பெரும்பாலான மக்கள் தங்கள் குறைகளையும் கவலைகளையும் வெளிப்படுத்துகிறார்கள்,” என்று அவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
எனவே, அம்னோ இளைஞர் பகுதி விரைவில் மக்களின் எதிர்பார்ப்பை நிதியமைச்சருக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள் என்று கூறினார்.
“தற்போது மக்கள் சிக்கலில் இருக்கும்போது மட்டுமே இந்த நடைமுறையைக் கையாள்வோம். ஒரே நேரத்தில் அல்லாமல் படிப்படியாக பெற அனுமதிக்க முடியும்.
“நிலைமை மீண்டவுடன், பங்களிப்பாளர்களை அவர்களின் பங்களிப்புகளை அதிகரிக்க மீண்டும் ஊக்குவிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
நேற்று, பிரதமர் மொகிதின் யாசின், கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் மக்களுக்கு, ஈபிஎப் கணக்கிலிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கு அனுமதிப்பது மிகவும் கடினம் என்றார்.
பரவல் காரணமாக பொருளாதார தாக்கத்தால் மக்கள் சுமையாக இருப்பதால், ஈபிஎப்பின் முதல் கணக்கு பணத்தை திரும்பப் பெறுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதை அறிந்திருப்பதாக மொகிதின் கூறினார்.
“இந்த விஷயத்தை கருத்தில் கொள்வது கடினம் என்று நான் கூற விரும்புகிறேன் முதல் ஈபிஎப் கணக்கு பணத்தை திரும்பப் பெற அனுமதிப்பது), அரசாங்கம் விரும்பாததால் அல்ல.
“உண்மையில், எனக்கு பலர் உதவுமாறு கோருகிறார்கள். இப்போது கூட, சேமிப்புகளை திரும்பப் பெறாமல், மக்களுக்கு உதவ நாங்கள் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை வழங்கியுள்ளோம், “என்று அவர் பகோவில் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.