Home One Line P2 கொவிட்19: காற்று மாசுபாடு காரணமாக தொற்று அதிகரிக்கலாம்

கொவிட்19: காற்று மாசுபாடு காரணமாக தொற்று அதிகரிக்கலாம்

498
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் அண்மைக்காலமாக பல்வேறு இடங்களில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளது. தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மோசமான தரநிலையில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், காற்று மாசுபாட்டால் கொவிட்-19 தொற்று ஆபத்து அதிகரிக்கும் என்று மத்திய சுகாதார துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 84.1 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77.7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 1.25 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்வுப்படுத்தப்பட்ட நிலையில், ஏறக்குறைய இயல்புநிலை திரும்பிவிட்டது. மேலும், பண்டிகைக்காலம் தொடங்கியுள்ளதால் பொது மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.