சென்னை: நிவர் புயல் வருகிற 25- ஆம் தேதி காலை அல்லது பிற்பகலில் தமிழகத்தின் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கை ஒட்டிய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இன்றைய தினம் அது வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்ரு எதிர்பாக்கப்படுகிறது. 6 முதல் 10 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மழை பெய்யத் தொடங்கி, படிப்படியாக அதிகரித்து வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கன மழையாக மாறும்.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
இந்த புயல் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும், விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.