Home One Line P1 ஆண்டு இறுதி வரை நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு தொடரலாம்!

ஆண்டு இறுதி வரை நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு தொடரலாம்!

586
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்கம் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஆண்டு இறுதி வரைக்கும் நீட்டிக்கலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரெட்சுவான் முகமட் யூபோப் தெரிவித்தார். ஒரு வேளை தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றால், இது நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது, சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“தொற்று எண்ணிக்கை அதிகமானால் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஆண்டு இறுதி வரை அமல்படுத்த உத்தேசித்துள்ளோம். அதே நேரத்தில், கொவிட்-19 தொற்று மேலும் பரவாமல் இருக்க இந்த கட்டுப்பாட்டை பயன்படுத்துவோம்,” என்று அவர் மக்களவையில் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால், கடந்த அக்டோபர் 14-ஆம் தேதியன்று சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூரில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமைல்படுத்தப்பட்டது.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் கீழ் உள்ள சமூகங்களுக்கு தொற்று பரிமாற்ற சங்கிலியை உடைக்க சில நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் வழங்கப்பட்டதாகவும் ரெட்சுவான் கூறினார்.

“இந்த நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் எப்போதும் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.