Home One Line P2 ஆஸ்ட்ரோவின் குழந்தைகளுக்கான அலைவரிசைத் தொகுப்பில் மாற்றங்கள்

ஆஸ்ட்ரோவின் குழந்தைகளுக்கான அலைவரிசைத் தொகுப்பில் மாற்றங்கள்

767
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவின் குழந்தைகளுக்கான அலைவரிசைத் தொகுப்பு மாற்றங்களைக் காண்கிறது.

Boomerang, Nick Jr மற்றும் 10,000 ஆன் டிமாண்ட் அத்தியாயங்கள் மூலம் அற்புதமான, புதிய உள்ளடக்கங்களுடன் ஆஸ்ட்ரோ குழந்தைகளுக்கான அலைவரிசைத் தொகுப்பைப் (கிட்ஸ் பேக்) புதுப்பிக்கிறது.

குழந்தைகளுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய 10,000 ஆன் டிமாண்ட் அத்தியாயங்கள், மற்றும் இரண்டு புதிய அலைவரிசைகளுடன் அடுத்த தலைமுறை மலேசிய குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கில் 15 டிசம்பர் 2020 முதல் குழந்தைகளுக்கான அலைவரிசைத் தொகுப்பு (கிட்ஸ் பேக்) புதுப்பிக்கப்படும் என்பதை அறிவிப்பதில் ஆஸ்ட்ரோ மகிழ்ச்சியடைகிறது.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோவின் உள்ளடக்க இயக்குனர் எக்னஸ் ரோசாரியோ கூறுகையில், “Boomerang (அலைவரிசை 619) மற்றும் Nick Jr. (அலைவரிசை 617) ஆகிய அலைவரிசைகளை நாங்கள் எங்கள் குடும்பத்திற்குள் வரவேற்கிறோம். இவ்விரண்டுச் சிறந்த அலைவரிசைகளும் குழந்தைகளுக்கான அலைவரிசைத் தொகுப்பில் (கிட்ஸ் பேக்), Cartoon Network (எச்டி அலைவரிசை 615 / அலைவரிசை 635) மற்றும் Nickelodeon (எச்டி அலைவரிசை 616 / அலைவரிசை 636) போன்ற அலைவரிசைகளுடன் இணையும்.

மேலும், Baby TV (அலைவரிசை 618), Astro Xiao Tai Yang (எச்டி அலைவரிசை 304 / அலைவரிசை 344), சுட்டி டிவி (அலைவரிசை 213), Astro Tutor TV (அலைவரிசை 601 / அலைவரிசை 602 / அலைவரிசை 603), Astro TVIQ (அலைவரிசை 610), மற்றும், நிச்சயமாக, மலேசியாவின் முதல் தர குழந்தைகளின் பொழுதுபோக்கு அலைவரிசையான, Astro Ceria (எச்டி அலைவரிசை 611 / அலைவரிசை 631) ஆகிய அலைவரிசைகளின் பட்டியலிலும் இணையும்.

Paw Patrol, Dora the Explorer, Top Wings, Shimmer and Shine மற்றும் Blue’s Clues & You ஆகிய உலகளாவிய நிலையில் பிரசித்திப் பெற்ற மழலையர் பள்ளித் (pre-school) தொடர்பான நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் Nick Jr. (அலைவரிசை 617)-இல் எதிர்ப்பார்க்கலாம்.

Mr. Bean: The Animated Series, My Little Pony: Pony Life, Scooby-doo! Guess Who?, The Tom & Jerry Show, The Looney Tunes Show மற்றும் Barbie Dreamhouse Adventures என பலதரப்பட்ட ரசிகர்களுக்கு ஏற்ற புகழ் பெற்ற நிகழ்ச்சிகளை Boomerang (அலைவரிசை 619)-இல் குழந்தைகள் எதிர்பார்க்கலாம்.

We Bare Bears, SpongeBob SquarePants, Beyblade, Upin & Ipin, Ejen Ali, Adventure Time, The Amazing World of Gumball, Ben 10, Peppa Pig, Bandanamu Kids Songs, SMK, Omar & Hana, Didi and Friends, The Five Elves, மோட்டு பட்லு எனப் பலப் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய, தரமான குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் கல்விச் சாரந்த 10,000க்கும் மேற்பட்ட அத்தியாயங்களை ஆஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக வாடிக்கையாளர்கள் கண்டுக் மகிழலாம்.

மேலும் பல உள்ளன! அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் 15 டிசம்பர் 2020 முதல் புதிய பாப்-அப் அலைவரிசையான FAMtv (அலைவரிசை 100)-ஐ கண்டுக் களிக்கலாம். Running Man, Mr. Bean, Doraemon, Phua Chu Kang, Crayon Sin Chan, Dexter’s Laboratory, Kampung Boy என மலேசியர்களுக்கு விருப்பமான, அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கண்டு மகிழக்கூடிய நிகழ்ச்சிகள் FAMtv (அலைவரிசை 100)-இல் இடம்பெறும்.

ரோசாரியோ தொடர்ந்து கூறுகையில், “எங்களின் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளின் உள்ளடக்கங்களை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகையில், 31 டிசம்பர் 2020 அன்று 24:00 மணிநேரத்தில் Disney XD HD (அலைவரிசை 612)-ஐ நிறுத்தப்போவதாக டிஸ்னி (Disney) அதன் தென்கிழக்கு ஆசியா கூட்டாளர்களுக்கு அறிவித்துள்ளதை இவ்வேளையில் நாங்கள் அறிவுறுத்த விரும்புகிறோம். புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அலைவரிசைத் தொகுப்பின் (கிட்ஸ் பேக்) ஒரு பகுதியாக Disney Channel HD (எச்டி அலைவரிசை 614 / அலைவரிசை 634) மற்றும் Disney Junior HD (அலைவரிசை 613) ஆகிய அலைவரிசைகளும், 31 டிசம்பர் 2020 அன்று 24:00 மணிநேரத்தில் எங்கள் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படுவதை நிறுத்திவிடும். எங்கள் வாடிக்கையாளர்களின் புரிதலுக்கு நன்றி கூறும் இவ்வேளையில் ஏதேனும் சிரமங்களுக்கும் வருந்துகிறோம் என்றும் ஆஸ்ட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.

எப்போதும் போல, எங்கள் வாடிக்கையாளர்கள், குறிப்பாக இளம் வயதினருக்கு, எங்களின் அனைத்து முயற்சிகளிலும் செயல்களிலும் முக்கியத்துவம் வழங்கப்படும். குழந்தைகளின் பொழுதுபோக்கு மற்றும் கல்விச் சார்ந்த உள்ளடக்கங்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்த கடமைப்பட்டுள்ள வேளையில், டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கும் அனைத்து புதிய உள்ளடக்க வரிசைகளைப் பகிர்ந்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம் எனவும் ஆஸ்ட்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my/kids எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.