Home One Line P2 ஆஸ்ட்ரோ : டிசம்பர் 14 – 20 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : டிசம்பர் 14 – 20 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

578
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவின் தொலைக்காட்சி அலைவரிசைகளில் எதிர்வரும் டிசம்பர் 14 தொடங்கி 20 டிசம்பர் வரையில் ஒளிபரப்பாகவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

திங்கள், 14 டிசம்பர்

குருதி மழை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

ரணா கிருஷ்ணகுமார் மற்றும் அவரது தனியார் துப்பறியும் குழுவைப் பற்றியக் கதை. குற்றவியல் துறையில் பணிப் புரிந்தப் பிறகு, ரணா ‘மூன்றாம் கண் துப்பறியும் நபர்கள்’ எனும் தனது சொந்தத் தனியார் விசாரணை நிறுவனத்தை நிறுவுகிறார். அத்துறையில் அனுபவமில்லாத 4 நபர்களை ஒரு பெரியக் காரணத்திற்காக அவ்வேலையில் அமர்த்துகிறார்.

குருதி மழை (புதிய அத்தியாயங்கள் – 10-14)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சி.குமரேசன், திலீப் குமார் & ஆமு திருஞானம்

பாதிக்கப்பட்டவரைச் சந்திக்கக் கதிர் மருத்துவமணைக்கு விரைகிறார். பாதிக்கப்பட்டவரின் உடலில் காணப்படும் ஒரு கலவையைக் குறித்து கதிர் மற்றும் எழிலிடம் தெரிவிக்கப்படுகிறது.

யார்? (புதிய அத்தியாயங்கள் – 10-14)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

அன்பா தங்களது உறவைப் பற்றி திவ்யாவிடம் விவாதிக்கிறார். யாழினி ஷமீனின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விசாரிக்கிறார்.

வியாழன், 17 டிசம்பர்

கடாக் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரன்வீர் ஷோரே, கல்கி கோச்லின், ராஜத் கபூர் &  சைரஸ் சஹுகர்

சுனில் வீட்டில் தனியாக இருக்கையில் சாயாவின் கணவர் வாசலில் நின்று சுனிலுக்கும் சாயாவிற்க்கும் இடையே உள்ளக் கள்ளத் தொடர்பினைக் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறார்.

வெள்ளி, 18 டிசம்பர்

கூத்தன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ராஜ்குமார் & நாகேந்திரப் பிரசாத்

ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளின் (ஃபிலிம் நகர்) எதிர்காலம் அச்சுறுத்தப்படுகையில், ​​ரணா தனது பின்தங்கிய நடனக் கலைஞர்களை (தி பேட்டரி பாய்ஸ்) ஒரு சர்வதேச நடனப் போட்டியில் வென்று தங்களது வீட்டைக் காப்பாற்றும் நோக்கில் அழைத்துச் செல்கிறார்.

சனி, 19 டிசம்பர்

ஜான் ஹதெலி பெ (Jaan Hatheli Pe) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தர்மேந்திரா, ஜீதேந்திரா, ராஜ் பப்பர், ஹேமா மாலினி &  ரேகா

சினோய் என்ற கடத்தல்காரனுக்காக சோனி வேலை செய்ய நிர்பந்தப்படுத்தப்படுகிறான். விரைவில் அவனின் மனைவிக்குத் தெரியாமல் அக்கும்பலின் தலைவராகிறான். இருப்பினும், ராம் அவனுக்கு எதிராகச் சாட்சியமளித்து அவரனைக் கைது செய்யும்போது அவனது தவறானச் செயல்கள் அம்பலமாகின்றன.

ஞாயிறு, 20 டிசம்பர்

எ பிளாட் (A Flat) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜிம்மி ஷீர்கில், சஞ்ஜை சூரி &  ஹேசல் க்ரோனி

யு.எஸ்.-இல் இருந்து வந்தவுடன் எதிர்பாராத நிகழ்வுகளின் ஒரு பகுதி ராகுலைத் தடுமாறச் செய்கிறது. வெளி உலகத்திலிருந்து முற்றிலும் தொடர்புத் துண்டிக்கப்பட்டு அவர் தனது சொந்த பிளாட்டில் சிக்கிக் கொள்கிறார். அவர் வெளியில் செல்வதைத் தடுக்கும் ஒரு பேயே அங்கு அவரின் ஒரே தோழர்.

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 6)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

சமையல்காரர்: சாந்தி ராஜ்

தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர்.

இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகு குறிப்புகளை

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை