Home One Line P1 எழுத்தாளர் சாமி மூர்த்தி காலமானார்

எழுத்தாளர் சாமி மூர்த்தி காலமானார்

1419
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான சாமி மூர்த்தி காலமானார். இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 1.38 மணியளவில் உடல் நலக் குறைவால் பெட்டாலிங் ஜெயா மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அவருக்கு வயது 79.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13) கீழ்க்காணும் அவரது இல்ல முகவரியில் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும். அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் ஷா ஆலாம், நிர்வாணா மயானக் கொல்லை மையத்துக்கு இறுதிக் காரியங்களுக்காகக் கொண்டு செல்லப்படும்:

No.10, Jalan Anggerik Vanilla 31/98C,
Canal Garden, Kota Kemuning
40460 Shah Alam.

மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் சாமி மூர்த்தி

#TamilSchoolmychoice

மூர்த்தி சாமிக்கண்ணு என்ற இயற்பெயர் கொண்ட இவர் “சாமி மூர்த்தி” என்ற புனைப் பெயரில் மலேசியாவில் நீண்ட காலமாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்தவர். சிறந்த சிறுகதைகளைப் படைத்தவர். 1980-ஆம் ஆண்டுகளில் “இலக்கியச் சிந்தனை” என்னும் அமைப்பினைத் தோற்றுவித்து நடத்தியுள்ளார்.

அரசாங்கத் துறையில் பணியாற்றிக் கொண்டே எழுத்துத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் சாமி மூர்த்தி.

“அகம்” என்னும் இலக்கிய அமைப்பில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1960 தொடக்கம் இவர் மலேசியாவின் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்தார்.

பெரும்பாலும் சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், போன்றவற்றை சாமி மூர்த்தி எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் படைப்புகள் நாட்டின் முக்கிய நாளிதழ்களிலும்,
இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

“நேர் கோடுகள் (சிறுகதைகள்)’, சாமி மூர்த்தி சிறுகதைகள் (2001) என இரண்டு நூல்களும் இவரது கைவண்ணத்தில் வெளிவந்திருக்கின்றன.

பெற்ற பரிசுகளும் விருதுகளும்

சாமி மூர்த்தி பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் தனது படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார்.

தமிழ் நேசன் நடத்திய போட்டியில் சிறுகதைக்காக ‘தங்கப் பதக்கம்’ பெற்றிருக்கிறார். “சங்கிலிமுத்து அங்கம்மா” போட்டியின் பரிசு, பாரதிதாசன் குழுவினர் (2002) விருதையும் பெற்றுள்ளார்.