கோலாலம்பூர்: சிறைக் கைதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்துவது குறித்த பரிந்துரைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று கைரி ஜமாலுடின் கூறிகிறார்.
புதன்கிழமை (டிசம்பர் 23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் தெரிவித்தார்.
“இது குறித்து விவாதிக்க நானும் டத்தோ டாக்டர் அடாம் பாபாவும் நாளை சந்திப்போம். நாங்கள் ஜனவரி மாதம் அமைச்சரவையில் எங்கள் பரிந்துரைகளை வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தின் தடுப்பு மருந்து திட்டம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. தடுப்பு மருந்து முன்னுரிமை பட்டியலில் சிறை கைதிகள் அதிகமாக இருக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக கைரி கூறினார்.
“ஏனென்றால் அவை அதிகமான பாதிப்புக்கு உட்படுத்துகின்றன. சிறையில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் அவர்கள் செல்வதற்கு வேறு இடமில்லை” என்று அவர் கூறினார்.